இஸ்ரேல் – ஹமாசிற்கு இடையிலான யுத்த நிறுத்தத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு..!
இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் உடனடி யுத்தம் நிறுத்தம் அவசியம் என்ற வேண்டுகோள்களிற்கு அமெரிக்கா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது யுத்த நிறுத்தத்திற்கான தருணமில்லை என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேரவை பேச்சாளர் ஜோன்கிர்பி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிற்கு தன்னை பாதுகாப்பதற்கான உரிமையுள்ளது என தெரிவித்துள்ள அவர் ஹமாசின் தலைமைக்கு எதிரான நடவடிக்கைகளை இஸ்ரேல் முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.