ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியின் போது, கல்வியமைச்சுக்கு முன் அடித்து விரட்டப்பட்ட ஆசிரியர்கள்..!
பெலவத்தை பாலம் துனா சந்திக்கு அருகில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்தப் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாலம்துன சந்தியை நோக்கி பேரணியாகச் சென்றபோது, பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக பொரளை-கொட்டாவ வீதி (174 பஸ் பாதை) போக்குவரத்து தடைபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.