சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு திட்டமிட்ட ஹமாஸ் – சிஎன்என்..!
ஹமாஸ் அமைப்பினர் சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு தி;ட்டமிட்டனர் என புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியி;ட்டுள்ளது.
இஸ்ரேல் மீதான பயங்கரமான அதிரடி தாக்குதலை திட்டமிட்ட ஹமாசின் சிறிய குழுவினர் காசாவில் உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதைகளிற்குள் தொலைபேசி இணைப்புகளை உருவாக்கி அவற்றை பயன்படுத்தி தொடர்பாடல்களில் ஈடுபட்டனர் என அமெரிக்காவிடம்பகிரப்பட்ட புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என சிஎன்என் தெரிவித்துள்ளது.
இரண்டு வருடகாலமாக இதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என விடயங்கள் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகள் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவினரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஹமாஸ் அமைப்பினர் தங்கள் மத்தியில் தொடர்பாடல்களில் ஈடுபடுவதற்கு உதவியுள்ளன என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன.
இரண்டுவருட கால திட்டமிடல்களி;ன் போது ஹமாசின் விசேட குழுவொன்று சுரங்கப்பாதைக்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி தனக்குள் தொடர்பாடல்களில் ஈடுபட்டது ஆனால் தாக்குதல் ஆரம்பமாகிய இறுதி நிமிடம் வரை தன்னை இரகசியமாகவே வைத்திருந்தது என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் ஏழாம் திகதியே தாக்குதலில் இணைந்துகொள்ளுமாறு ஏனைய ஹமாஸ் உறுப்பினர்களிற்கு அழைப்புவிடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளன.
திட்டமிடல்கள் இடம்பெற்ற இரண்டு வருடங்களில் அமெரிக்க புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக அவர்கள் கணிணிகளை இணையங்களை பயன்படுத்துவதை தவிர்த்தார்கள் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட விசேட குழுவினரிற்கு அப்பால் இந்த தாக்குதல் திட்டம் குறித்து அதிக கலந்துரையாடல் இடம்பெறவில்லை எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் பழையபாணி திட்டமிடல்களில் ஈடுபட்டது, தனிப்பட்ட ரீதியில் சந்திப்புகள் இடம்பெற்றன – டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது என இஸ்ரேல் பகிர்ந்து கொண்டுள்ள புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.
டிஜிட்டல் சாதனங்களின் சமிக்ஞைகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இடைமறித்து கேட்ககூடும் என்பதால் அவை தவிர்க்கப்பட்டன எனவும் சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏன் ஹமாஸ்தாக்குதல் குறித்து இறுதிவரை எதனையும் அறியமுடியாத நிலையிலிருந்தன என்பதற்கான காரணங்கள் இதன் மூலம் தெளிவாகியுள்ளது.