மின், நீர் கட்டணங்களின் அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்..!
மின் கட்டணம் மற்றும் நீர் கட்டணம் உட்பட வாழ்க்கை செலவுகள் அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஒருகொடவத்தை சந்தியில் நேற்று புதன்கிழமை (25) பொதுமக்கள் தீ பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.