
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது மகனின் உடல்நிலை என் கண்முன்னால் மோசமடைகின்றது -சிகிச்சைக்கான வழிகள் இன்றி பரிதவிக்கும் காசா பெண் கதறல்..!
காசாவின் தென்பகுதியில் ரபாவில் வசிக்கும் அஸ்மாவின் பத்து வயது மகன் புற்றுநோயாளி.
மோதல்கள் ஆரம்பமான பின்னர் அவர்கள் ஐநாவின் பாலஸ்தீனியர்களிற்காக முகவர் அமைப்பின் முகாமில் தஞ்சமடைந்தனர் எனினும்மகனின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டதால் அவர்கள் மீண்டும் வீடுதிரும்பியுள்ளனர்.
தனது மகனிற்கு அவசியமாக தேவைப்படுகின்ற மருந்துகளை சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதில் அஸ்மா கடும் நெருக்கடிகளையும் ஏமாற்றங்களையும் எதிர்கொண்டுள்ளார்.
இந்த வார ஆரம்பத்தில் காசாவின் ஐரோப்பிய மருத்துவமனையிலிருந்து சிறுவனிற்கு மருந்துகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் காணப்பட்டன ஆனால் மருத்துவமனையில் மருந்துகள் மருத்துவபொருட்களின் எண்ணிக்கை வேகமாக குறைவடைவதால் அந்த மருத்துவமனை சிறுவனிற்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளது.
என் கண்முன்னால் எனது மகனின் உடல்நிலை மோசமடைவதை நான் பார்க்கின்றேன் என தாயார் பிபிசிக்கு தெரிவித்தார்.
காசாவின் ஏனைய மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான வாய்ப்புகள் காணப்படலாம் ஆனால் அவர்களால் அங்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது நான் ரபாவில் வாழ்கின்றேன் இஸ்ரேல் வாகனங்களை இலக்குவைத்து தாக்குவதால் என்னால் காசாவிற்கு செல்ல முடியாது பொதுமக்களின் வாகனங்களை அம்புலன்ஸ்களை கூட தாக்குகின்றனர் என அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் காசாவிற்கான மின்சாரத்தை துண்டித்துள்ளதுடன் எரிபொருளை அனுப்ப மறுக்கின்றது.
இது அஸ்மாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது வீட்டிலிருந்த எனது மகனின் மருந்துகள் சில பழுதடைந்துள்ளன எங்களால் மருந்துகளை பாதுகாக்கவோ சேமிக்கவோ முடியாது ஒருவரிடம் சூரிய சக்தியில் இயங்கும் மின்கலங்கள் உள்ளன நான் அவரிடம் மருந்துகளை கொடுத்துவைத்திருக்கின்றேன் ஆனால் அந்த வீடு மிகவும் தூரத்தில் உள்ளது நாங்கள் அங்கு செல்வது மிகவும் ஆபத்தான விடயம் என அவர் தெரிவிக்கின்றார்.