
ஹமாஸ் குறித்து ஐநா தீர்மானம் எதனையும் குறிப்பிடவில்லை – வாக்கெடுப்பை தவிர்த்தது அவுஸ்திரேலியா..!
ஐக்கியநாடுகளின் தீர்மானம் ஏழாம் திகதி தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் குறித்து எதனையும் தெரிவிக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலியா வாக்கெடுப்பை தவிர்த்துள்ளது.
ஜோர்தானின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சில விடயங்களை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள ஐநாவிற்கான அவுஸ்திரேலிய பிரதிநிதி ஜேம்ஸ்லார்சன் மனிதாபிமான பொருட்களை காசாவிற்குள் அனுப்புவதற்காக மனிதாபிமான இடைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காசாவில் மனிதாபிமான நிலை மோசமாகவுள்ளது மனிததுயரங்கள் பரந்துபட்டதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் காணப்படுகின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஏழாம் திகதி தாக்குதல்களிற்கு ஹமாசே காரணம் என தீர்மானத்தில் தெரிவிக்கப்படவில்லை ஹமாசை குறிப்பிடாததால் தீர்மானம் முழுமையற்றது என அவர் தெரிவித்துள்ளார்.