கொழும்பில் போராட்டத்தில் பதற்றம்; 6 பேர் கைது..!

கொழும்பில் போராட்டத்தில் பதற்றம்; 6 பேர் கைது..!

கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் தேரரொருவர் உட்பட 6 பேரைப் பொலிஸார் கைது செய்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்துத் தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.