
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்ப்புப் பேரணி..!
மின்சார கட்டணம் அதிகரித்திருப்பதனால் பல்வேறு மின்சார சேவை தொழிற்சங்கங்கள் மின்சார சபையின் வருடப்பூர்த்திக்கு இணையாக ஆர்ப்பாட்ட பேரணியொன்றை இன்று (01.11.2023) முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.
திவுலப்பிட்டியவிலிருந்து எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள மின்சக்தி அமைச்சு வரை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
பேரணியை தடுக்க முயலும் பொலிஸார்
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணியை தடுப்பதற்கு பொலிஸார் முயற்சிக்கின்றனர் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்புப் பேரணி தொடர்பில் திவுலப்பிட்டிய நகரில் துண்டுப்பிரசுங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.