அம்புலன்ஸ்களை தொடர்புகொள்ள முடியாததால் கழுதையில் உடல்களை கொண்டு செல்லும் மக்கள் – காசா மருத்துவர்..!

அம்புலன்ஸ்களை தொடர்புகொள்ள முடியாததால் கழுதையில் உடல்களை கொண்டு செல்லும் மக்கள் – காசா மருத்துவர்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  காசாவில் அம்புலன்ஸ்களை அழைப்பதற்கு வழியில்லாததால் கழுதைகளை பயன்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்கின்றனர் என வைத்தியர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மொபைல் போன்கள் இயங்காததால் இன்றிரவு காசாவில் மிகவும் நெருக்கடியான நிலைமை காணப்படுகின்றது.

தொடர்பாடல் துண்டிக்கப்பட்டுள்ளதால் அம்புலன்ஸ்களை தொடர்புகொள்ள முடியாததால் மக்கள் கழுதைகளிலும் தங்கள் வாகனங்களிலும் உடல்களை கொண்டு செல்கின்றனர் என காசாவில் உள்ள அல்சிபா மருத்துவமனையின் இயக்குநர் தெரிவிக்கின்றார்.

தொடர்பாடல்கள் மீண்டும் திரும்பியுள்ள போதிலும் காசா நகரிலிருந்து தகவல்களை பெறுவது மிகவும் கடினமானதாக காணப்படுகின்றது என பிபிசி தெரிவித்துள்ளது.