கிரிக்கெட்டை பாதுகாக்க 225 பேரும் ஒன்றிணையும் சாத்தியம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாக சபையை வாபஸ் பெற வேண்டும் என கூட்டாக தீர்மானம் கொண்டுவர கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (08) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் போதே இது இடம்பெற்றுள்ளது.
இதன்படி, குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு இன்று (09) பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதனை ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்.