‘விளையாட்டின் வெற்றி தோல்வியினை எம்மால் கட்டுப்படுத்த முடியாது’, ஆனால் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கட் அணி இன்று (10) நாடு திரும்பிய நிலையில், அணியின் தலைவர் குசல் மென்டிஸ், போட்டிகளின் தொடர் தோல்வி குறித்தும் எதிர்வரும் போட்டிகள் தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
‘.. உண்மையிலேயே நடந்த போட்டிகளை சிறப்பாக நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்து கவலையடைகிறோம். அது தவிர்ந்த எனக்கு கூறுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.
நாம் அழுத்தத்திற்கு உள்ளாகியதா என்று கேட்டால் அவ்வாறு இல்லை. ஆரம்பமே நன்றாகத்தான் இருந்தது. முதல் இரண்டு ஆட்டங்களையும் சிறப்பாக விளையாடினோம். பின்னர் தொடர் தோல்விகளிலும் நாம் அணியாக என்ன செய்வது என்றே சிந்தித்தோம். எங்களால் இயன்றளவு சிறப்பாக விளையாடினோம்.
அணிக்குள் பிளவுகள் இல்லை. உண்மையில் சிறப்பாகவே விளையாடினோம். வெற்றிக்காகவே அனைவரும் முயற்சித்தோம். எனக்கு அணி வீரர்களில் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கப் பெற்றது. விளையாட்டின் வெற்றி தோல்வியினை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. நாம் சோர்ந்தால் ஆட்டமும் தோல்வியில், நாம் எமது மூன்று பாகங்களிலும் (துடுப்பாட்டம். பந்து வீச்சி, களத்தடுப்பு) நன்றாக செயற்பட வேண்டும்.
எதிர்வரும் போட்டிகள் தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்டத்தில் நன்றாக விளையாட வேண்டும்…’