
கம்பளை கல்வி அலுவல மலசலகூடத்திலிருந்து சடலம் மீட்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கம்பளை கல்வி அலுவலகத்தில் பல்பணி உதவியாளராக கடமையாற்றிய கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் குறித்த அலுவலகத்தின் மலசலகூடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நேற்று (13) மாலை கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதன்படி கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கம்பளை மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.