இம்முறை அரை இறுதிச் சுற்றில் நடுவராக செயற்படும் வாய்ப்பு குமார் தர்மசேனவுக்கு வழங்கப்படவில்லை..!

இம்முறை அரை இறுதிச் சுற்றில் நடுவராக செயற்படும் வாய்ப்பு குமார் தர்மசேனவுக்கு வழங்கப்படவில்லை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – (எம்.எம்.சில்வெஸ்டர்)

ஐ.சி.சி.யின் பிரதான தொடர்களின் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் நடுவராக செயற்பட்டவரும் அனுபவம் வாய்ந்தவருமான இலங்கையின் குமார் தர்மசேனவுக்கு, இம்முறை அரை இறுதிச் சுற்றில் களநடுவராக செயற்படும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

குறிப்பாக கடந்த 2012 இருபதுக்கு 20 உலகக் கிண்ணம், 2013 சம்பியன்ஸ் கிண்ணம்,இ 2014 இருபதுக்கு 20 உலகக் கிண்ணம், 2015 உலகக் கிண்ணம், 2016 இருபதுக்கு 20 உலகக் கிண்ணம், 2017 சம்பியன்ஸ் கிண்ணம், 2019 உலகக் கிண்ணம்,இ 2021 இருபதுக்கு 20 உலகக் கிண்ணம், 2022 இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் ஆகிய 9 தொடர்களின் அரை இறுதிச் சுற்றில் நடுவராக செயற்பட்டிருந்தார்.

இவ்வாறு தொடர்ச்சியாக 9 தடவைகள் ஐ,சி.சி.யின் அரை இறுதிச் சுற்றில் நடுவராக செயற்பட்ட குமார் தர்மசேனவுக்கு இம்முறை அரை இறுதிச் சுற்றில் நடுவராக செயற்படும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

குமார் தர்மசேன இதுவரை 103 ‍டெஸ்ட் போட்டிகளுக்கும், 191 சர்வதேச ஒருநாள் ‍போட்டிகளுக்கும், 61 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கும் கள நடுவராக, தொலைக்காட்சி நடுவராக செயற்பட்டுள்ளளார்.