பன்டாரவளை பூனாகலை பிரதான வீதியில் மண்சரிவு..!

பன்டாரவளை பூனாகலை பிரதான வீதியில் மண்சரிவு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பன்டாரவளை பூனாகலை பிரதான வீதியில் புரொக்டன் பகுதியில் இன்று காலை 8.20 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் குறித்த பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வீதியூடாக பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோஸ்தர்கள் தோட்ட தொழிலாளர்கள் பொது மக்கள் என பலரும் பயணிக்கும் பிரதான பாதை என்பது குறிப்பிடத்தக்கது,

அத்துடன் பன்டாரவலையிலிருந்து கொஸ்லாந்தை செல்லும் போக்குவரத்து மார்க்கமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல மணி நேரம் கடந்த போதும் இதுவரையில் வீதி சீர்செய்யப்படாமையினால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாகனங்கள் பயணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

நேரடி ரிபோட் ஜீ குணா