ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரை சந்தித்த ஜனாதிபதி ரணில்..!

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரை சந்தித்த ஜனாதிபதி ரணில்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையின் கிரிக்கெட் நெருக்கடி குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை கலந்துரையாடியதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதன்போது இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமை குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஜெய் ஷா அடுத்தக்கட்ட நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளபட வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆலோசனை வழங்கியதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.