இஸ்ரேலுக்கு இலங்கைத் தொழிலாளர்களை  வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானம்..!

இஸ்ரேலுக்கு இலங்கைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – (எம்.மனோசித்ரா)

இலங்கைத் தொழிலாளர்களை தொழில்களில் அமர்த்துதல் தொடர்பாக இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் அரசின் திட்டவட்டமான தொழிற் சந்தைத் துறைகளில் தற்காலிகமாக தொழிலில் அமர்த்துவதற்கு இஸ்ரேல் அரசுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும், அதற்காக, இருதரப்பினருக்கும் இடையில் அடிப்படை ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

குறித்த ஒப்பந்தத்திற்கமைய, இஸ்ரேலில் விவசாய நடவடிக்கைகளுக்காக தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அந்நாட்டு சனத்தொகை, புலம்பெயர் மற்றும் தேச எல்லைகள் அதிகாரசபை எதிர்பார்க்கின்றது.

அதற்கமைய, நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தில் 2023.11.06 ஆம் திகதி இருதரப்பினரும் கையொப்பமிட்டமையைக் குறிப்பிட்டு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கருத்தில் கொண்டுள்ளது.