பொலிஸ் மோட்டார் சைக்கிளை தனியாருக்கு பயன்படுத்த கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலையில் கைது..!

பொலிஸ் மோட்டார் சைக்கிளை தனியாருக்கு பயன்படுத்த கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலையில் கைது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  திருகோணமலையில் பொலிஸ் மோட்டார் சைக்கிளை தனியாருக்கு பயன்படுத்த கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த மோட்டார் சைக்கிளை தனியாருக்கு செலுத்திச்செல்ல கொடுத்து இவர் மோட்டார் சைக்கிளின் பின் புறத்தில் அமர்ந்து பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அனுமதியின்றி மது போதையில் இவ்வாறு செயற்பட்டுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.