கிழக்கில் தொடர் மழை – வெள்ளத்தில் மூழ்கிய ஏறாவூர் பிரதேசம்..!

கிழக்கில் தொடர் மழை – வெள்ளத்தில் மூழ்கிய ஏறாவூர் பிரதேசம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொடர் மழை காரணமாக ஏறாவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு

இன்று காலை முதல் மட்டக்களப்பு, ஏராவூர் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக வீதிகள் நீரில் மூழ்கியுள்ள அதேவேளை, பல பிரதேசங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அசௌகரியத்துக்கு உள்ளாக உள்ளனர்.

பிரதான வீதியில் நீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.