
விமலின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் சஜித்தின் சமகி ஜன பலவேகவில் இணைய மாட்டார்கள்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் எவரும் சமகி ஜன பலவேகவில் இணைவதற்கு தீர்மானம் எடுக்கவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.காமினி வலேபொட தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுக்கு வேறு எந்த கட்சியிலும் இணையும் எண்ணமோ அல்லது கட்சியை விட்டு விலகவோ விருப்பம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சமகி ஜன பலவேகவில் இணைந்து கொள்வதாக வெளியான தகவல் தொடர்பில் கலந்துரையாடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இது தொடர்பான ஊடகச் செய்திகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினையையும் எழுப்பியுள்ளார்.