VAT வரி அதிகரிப்பை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி 30-ம் திகதி வீதிக்கு..!

VAT வரி அதிகரிப்பை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி 30-ம் திகதி வீதிக்கு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வற் வரி அதிகரிப்பை எதிர்த்து எதிர்வரும் 30ஆம் திகதி மக்கள் வீதியில் இறங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தான் முதலில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் சென்று போராட்டத்தை ஆரம்பித்தது எனவும் மரிக்கார் தெரிவித்தார்.

மறந்து போன வரலாற்றை அரசுக்கு நினைவூட்டி ஆட்சியை விரட்டியடித்து விட்டுத்தான் திரும்பிப் பார்ப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.