உயர்தரப் பரீட்சை விவசாய விஞ்ஞான பாட  வினாத்தாள் இரத்து – நடந்தது என்ன?

உயர்தரப் பரீட்சை விவசாய விஞ்ஞான பாட வினாத்தாள் இரத்து – நடந்தது என்ன?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞானம் பாட பரீட்சை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராத உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞானம் பாகம் 2 பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய பரீட்சைத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.