நரேந்திர மோடியின் திருகுதாளங்களை அம்பலமாக்கிய ஜாஹீர் நாயக்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – – ஹைதர் அலி –
ரூ500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என்று 2016 நள்ளிரவில் அதிரடியாக அறிவித்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் முந்திக் கொண்டு முதல் ஆளாக (Hats off narendramodi ji. New india is born JaiHind) என பாராட்டு தெரிவிக்கவில்லையா ?
தூய்மை இந்தியா என மோடி வெளக்கமாத்தை கையில் எடுத்தபோது கமலஹாசன் துப்புறவு தொழிலாளி போல போஸ் கொடுத்து தெருவில் வெளக்கமாத்தோடு நிற்கவில்லையா ? அப்படி ஒருவேளை அவர் நிற்காவிட்டால் அவரின் அலுவலகங்கள், வீடுகளை அமலாக்கத் துறை (ED) ரெய்டு பண்ணி துப்புறவு பண்ணியிருக்கக் கூடும்.
ராமர் கோவியிலிருந்து மக்கள் விரோத நடவடிக்கை சட்டங்கள் வரை அரசாங்கத்தை ஜால்ரா அடிக்கச் சொல்லி பிரபலங்களுக்கு ஆர்டரும் ஆதனால் இலாபமும் வருகிறது.
ஒரு சிலர் மருத்துவர் ஜாஹீர் நாயக் போன்றவர்கள் மறுத்து ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) செய்ய வேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப் படுகிறார்கள்.
என்னிடம் மலேசியா வரை வந்து இந்திய அதிகாரிகள் பேரம் பேசினார்கள், மோடி சிறப்பாக ஆட்சி செய்கிறார், எனச் சொல்ல சொன்னார்கள், அப்படி பரப்புரை செய்தால் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு தாங்கள் இந்தியா வரலாம் என்றார்கள். நான் மறுத்து விட்டேன் என ஜாஹீர் நாயக் அவர்களே ஒரு பேட்டியில் மனம் வெதும்பி சொல்லி இருக்கிறார்.