ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதம் நடைபெறும்..!

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதம் நடைபெறும்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று (02) அனுராதபுரத்தில் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்ட ஐ.தே.க மாநாட்டில் உரையாற்றிய ரங்கே பண்டார, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வருவார் என்பதால், அதற்கு அனைவரும் தயாராகுமாறும் கேட்டுக் கொண்டார்.