ஐக்கிய மக்கள் சக்கியின் எதிர்ப்பிற்கு ஆதரவு வழங்காமல், சபையிலிருந்து வெளியேறாமல் இருந்த  SJB எம்பிக்கள் யார்..?

ஐக்கிய மக்கள் சக்கியின் எதிர்ப்பிற்கு ஆதரவு வழங்காமல், சபையிலிருந்து வெளியேறாமல் இருந்த SJB எம்பிக்கள் யார்..?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு இன்று (07) காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமானது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அங்கு 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரம் தற்போது விரைவான வளர்ச்சியை அடைந்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி சபையில் உரையாற்றும் போது, ​​ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு சபையை விட்டு வெளியேறியதுடன், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை.

ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, பாட்டளி சம்பிக்க ரணவக்க, இஷாக் ரஹ்மான் மற்றும் குமார வெல்கம ஆகியோர் ஜனாதிபதியின் உரையை கேட்டுக்கொண்டே கூட்டத்தில் இருந்தனர்.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) நடைபெறவுள்ளது.