கொக்கெய்ன் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் யார்?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொக்கெய்ன் போதைப்பொருளை பயன்படுத்தும் பலம் பொருந்திய அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அவரது பேச்சில் தெளிவாக அவர் சாடியதும் ஹரின் பெர்னாண்டோவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹிரு அலைவரிசையில் நேற்று (04) இடம்பெற்ற சலகுன அரசியல் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதி என்று விவேகமுள்ள ஒருவர் கூற முடியாது.
மேலும், ஹரின் பெர்னாண்டோ போன்ற ஆழ்மனம் இல்லாத ஒருவருடன் தமக்கு விவாதம் தேவையில்லை என்றும், இந்தியா இந்நாட்டை விழுங்க அரசாங்கமே இடமளிக்கிறது என்றும், அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு இது தொடர்பான உண்மைகள் தெரியும் எனவும் ஹரீன் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.