இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக பிடியாணையா..?

இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக பிடியாணையா..?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உள்ள இஸ்ரேல் சார்பு குடியரசுகட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த சட்டமூலத்தை சனப்பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

அமெரிக்க குடியரசுகட்சி பெரும்பான்மை பெற்றுள்ள சனப்பிரதிநிதிகள் சபையில் 247 பேர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர், 155 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

இஸ்ரேலை ஆதரிக்கும் ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அது சட்டமாக மாற்றப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

செனெட்டில் பெரும்பான்மையை கொண்டுள்ள ஜனநாயக கட்சியினர் இந்த சட்டமூலத்தை நிராகரிப்பார்கள் என பிபிசி தெரிவித்துள்ளது.

செனெட்டின் ஆதரவு கிடைத்தால் மாத்திரமே இந்த சட்டமூலம் சட்டமாகும்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இந்த சட்டமூலத்தை கடுமையாக எதிர்க்கின்றார் என பிபிசி தெரிவித்துள்ளது.