சஜித் பிரேமதாசவின் எண்ணக்கரு – அமீர் அலியும், ஹிஸ்புல்லாவும் பங்கேற்பு..!

சஜித் பிரேமதாசவின் எண்ணக்கரு – அமீர் அலியும், ஹிஸ்புல்லாவும் பங்கேற்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் 280 ஆவது கட்டம் இன்று மட்டக்களப்பு, கல்குடா, வாழச்சேனை, அந்நூர் தேசிய பாடசாலையை மையமாக கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநித்துவப்படுத்தும் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.