செவ்வாய்க்கிழமை ஒன்றரை மணி நேரம் அமர்வு – ஒரு கோடி ரூபாய் நாசம்..!

செவ்வாய்க்கிழமை ஒன்றரை மணி நேரம் அமர்வு – ஒரு கோடி ரூபாய் நாசம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02) அவசரக் கூட்டத்தை நடத்துவதற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிக்கையொன்றை முன்வைப்பதற்காக பாராளுமன்றம் கூட்டப்பட்டது.

ஜனாதிபதியின் உரையின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டதை அடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த அமர்வு ஒன்றரை மணி நேரம் மட்டுமே நடைபெற்றது.

சபை அமர்வு குறுகியதாக இருந்தாலும், பொதுவாக ஒரு பாராளுமன்றக் கூட்டத்தின் ஒரு நாளுக்குச் செலவிடப்படும் தொகையே குறுகிய கூட்டங்களுக்கும் செலவாகும் என்று பாராளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 

COMMENTS

Wordpress (0)