நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆராயப்படும் – ஜே.வி.பி தெரிவிப்பு

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆராயப்படும் – ஜே.வி.பி தெரிவிப்பு

நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினரால் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான யோசனையொன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவிற்கு ஆதரவான தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் உண்டா என ஆராய்ந்து அடுத்த வாரமளவில் கட்சியின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.