பாராளுமன்ற நீர் தடாகத்திற்குள் வீழ்ந்த NPP உறுப்பினரின் வாகனம்

பாராளுமன்ற நீர் தடாகத்திற்குள் வீழ்ந்த NPP உறுப்பினரின் வாகனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் இன்று (26) மாலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்கவை மீண்டும்  ஏற்றிச் செல்ல சாரதி வந்தபோதே இவ்வாறு தடாகத்திற்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.