முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்


(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் சற்று முன்னர் காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 80.

சிறிது நாட்கள் நோய்வாய்ப்பட்டு இருந்த இவர், வயது மூப்பினால் உயிரிழந்தார் என குடும்ப அங்கத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்று பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளராக இருந்தவர். அதே நேரம், வேதாந்தி என அழைக்கப்பட்ட இவர் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையில், முதலாவது எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டவர். ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.