சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும்,  அனர்த்தம் காரணமாக இதுவரையில்  20 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் இதுவரை 142,624 குடும்பங்களைச் சேர்ந்த 479,871 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.103 வீடுகள் முழுமையாகவும், 2,635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.8,470 குடும்பங்களைச் சேர்ந்த 27,517 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)