பாரிஸில் தீவிரவாதத் தாக்குதலில் இறந்தோருக்கு ஒபாமா அஞ்சலி

பாரிஸில் தீவிரவாதத் தாக்குதலில் இறந்தோருக்கு ஒபாமா அஞ்சலி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 13ம் திகதி ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தினர். அதில் 130 பேர் பலியாகினர். 352 பேர் காயம் அடைந்தனர். இதற்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதற்கிடையே பாரிஸில் இன்று பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடக்கிறது. அதில் 150 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று விமானம் மூலம் பாரிஸ் சென்றார். ஒர்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர் நேராக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய படாக்லன் தியேட்டருக்கு சென்றார்.

அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அந்த நினைவிடத்தில் ரோஜா மலர் வைத்தார்.

மிகவும் மவுனமாக தலைகுனிந்து நின்ற அவர் தனது இருகைகளையும் முன்புறம் கட்டியபடி இருந்தார். அவருடன் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவும், பாரிஸ் நகர மேயர் ஆன்னி ஹிடால் கோவும் உடன் இருந்தனர்.

ஒபாமா அஞ்சலி செலுத்த வந்ததை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது. வானத்தின் மீது ஹெலிகாப்டர்கள் வட்டமடித்து பறந்தபடி பாதுகாப்பு பணியில் பொலிசார் ஈடுபட்டிருந்தனர்.