பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய மேல் மாகாணம்

பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய மேல் மாகாணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2023 ஆம் ஆண்டில் இலங்கையின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணத்தினால் அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன் பெறுமதி 43.7% என மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பங்களிப்பு சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் இந்த பங்களிப்பில் சேவை மற்றும் கைத்தொழில் துறைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன.

இதற்கிடையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கு முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் மிக உயர்ந்த பங்களிப்பை வழங்க முடிந்துள்ளது.

அதன்படி, வடமேல் மாகாணம் 10.9% மற்றும் மத்திய மாகாணம் 10.3% பங்களிப்பை வழங்கியுள்ளது.

மேல் மாகாணத்தின் பங்களிப்பு சற்று குறைவடைந்த போதிலும், ​​2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023 இல் மத்திய, வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைந்த வேகத்தில் காணப்பட்டாலும், அனைத்து மாகாணங்களின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2023 ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்துள்ளது.

பொருளாதார நடவடிக்கைகளுக்கு மாகாணங்கள் வழங்கிய பங்களிப்பின் படி, வடமேல் மாகாணம் விவசாய நடவடிக்கைகளில் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளதுடன் அதன் பெறுமதி 19.6% ஆகும்.

தென் மாகாணம் 13.5% மற்றும் மத்திய மாகாணம் 12.4% பங்களிப்பை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது மிக உயர்ந்த பங்களிப்பினை வழங்கியுள்ளன.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டில், மேல் மாகாணத்திற்கு தொழில்துறை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது மற்றும் அதன் பெறுமதி 48.7% ஆகும்.

மொத்த தொழில்துறை உற்பத்தியில் 50 வீதத்திற்கு அண்மித்த அளவில் இதற்கு பங்களித்துள்ளது.

மொத்த தொழில்துறை நடவடிக்கைகளுக்கு அடுத்த அதிகபட்ச பங்களிப்பை வடமேல் மாகாணம் 12.3% ஆகவும், மத்திய மாகாணம் 12.3% ஆகவும் பதிவு செய்துள்ளன.

சேவைத் துறையின் செயல்திறனைப் பொறுத்தவரை, மேல் மாகாணம் முன்னணியில் உள்ளது மற்றும் அதன் பெறுமதி 45.9% ஆகும்.

இரண்டாவதாக மத்திய மாகாணம் 10.4% பங்களிப்பையும், தென் மாகாணம் 9.9% பங்களிப்பையும் வழங்கியுள்ளன.

மேலும் கடந்த வருடம் இலங்கையின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 27,630 பில்லியன் ரூபாவாக இருந்ததாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)