செப்பு கம்பியை அறுக்கச் சென்றவர் மின்சாரம் தாக்கி பலி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அம்பாறை நகரில் உள்ள மின்சார சபைக்கு சொந்தமான மின்மாற்றியில் செப்பு கம்பியை அறுக்கச் சென்ற நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (26) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
செப்பு கம்பியை அறுக்க சென்ற நபர், மின்சார தூணில் தொங்கியிருந்த நிலையில், பின்னர் நகரத்திற்கான மின்சாரத்தை துண்டித்து அவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அம்பாறை நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்தவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.
அம்பாறை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.