HMPV வைரஸ் ஆபத்தானதா?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
மனித மெட்டாப் நியூமோ அல்லது HMPV வைரஸ் பயப்பட வேண்டிய ஒன்றல்ல என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
சீனாவில் புதிய சுவாச நோய்த்தொற்றுகள் குளிர்காலத்தில் மிகவும் பொதுவானவை என தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைரஸ் சுவாச பிரச்சனைகளை அதிகப்படுத்தினாலும், இது புதிய வைரஸோ அல்லது தொற்றுநோய் அச்சுறுத்தலோ அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, குளிர்காலத்தில் மக்கள் நோய்க்கிருமிகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.
இருப்பினும், இந்த HMPV வைரஸ் நிலை பொதுவாக ஒரு வாரத்திற்குள் நீங்கிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் குறிப்பாக பிற நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அவதானத்துடன் இருப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.