நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்னும் சற்றுநேரத்தில் நியூசிலாந்தின் ஹாமில்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மழை காரணமாக போட்டியை 37 ஓவர்களுக்கு மட்டுப்படுத்த நடுவர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.