இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெறுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 113 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.