எலான் மஸ்க் வசமாகும் TikTok

எலான் மஸ்க் வசமாகும் TikTok

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டிக்டொக் எனப்படும் செயலி உலகளவில் பிரபலமாக இருந்த நிலையில், இந்தியா உட்பட பல நாடுகள் அதனை தடை செய்தன. இந்நிலையில், அமெரிக்காவிலும் சமீபத்தில் இந்தச் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டது. சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்தின் இந்த செயலி, தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடை செய்யப்பட்டதாக பல நாடுகள் அறிவித்தன. குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் இந்தச் செயலியை 17 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வந்த நிலையில், தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை நீக்க சீன அரசு முயற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், எலான் மஸ்க் அவர்களிடம் டிக்டொக் நிர்வாகத்தை ஒப்படைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே எலான் மஸ்க் டிக்டொக் செயலியை வாங்குவது குறித்து தனது எக்ஸ் பக்கத்தை பின்தொடர்பவர்களிடம் (followers) கருத்துக் கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)