உலகெங்கிலும் உள்ள USAID ஊழியர்கள் திரும்ப அழைப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2025 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி முதல் உலகெங்கிலும் உள்ள அனைத்து USAID ஊழியர்களையும் விடுமுறையில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
விசேட பணிகளில் ஈடுபடும் ஒரு சில ஊழியர்களை மட்டுமே தொடர்ந்து சேவையில் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நபர்கள் யார் என நாளை (06) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையை USAID நிர்வாகம் எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.