இலங்கையின் பல இடங்களில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

இலங்கையின் பல இடங்களில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து எரிபொருளுக்கான வரிசை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத தள்ளுபடியை இரத்துச் செய்ய கனியவள கூட்டுத்தாபனம் தீர்மானித்திருந்தது.

இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.