அரசாங்கம் இன்று வௌியிட்ட புதிய பட்டியல்

அரசாங்கம் இன்று வௌியிட்ட புதிய பட்டியல்

 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மக்கள் போராட்டம் (அரகலய) காலத்தில் வீடுகள் எரியூட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட இழப்பீட்டு தொகைக்கு மேலதிகமாக, அரசாங்கத்தின் வியத்புர வீட்டு வளாகத்திலிருந்து வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக இன்று (07) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

பன்னிபிட்டிய வீர மாவத்தையில் அமைந்துள்ள வியத்புர வீட்டு வளாகத்தின் Block 05 இல் வீடுகளை வழங்குமாறு  பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போதைய பாராளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, அப்போதைய 26 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர வீட்டு வளாகத்திலிருந்து வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி வீட்டு வளாகத்தில் வீடுகளை விற்பனை செய்யும் போது, வாங்குபவர்களுக்கு வீடுகளை விற்கும் பொதுவான முறை என்பது, வீட்டின் மதிப்பில் முதலில் 50% செலுத்தி, ஒரு வருடத்திற்குள் முழு தொகையையும் செலுத்தி முடித்த பின்னரே வீடுகள் வழங்கப்படுவதாகும்.

ஆனால், குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்பணத்தை 25% ஆகக் குறைத்து, மீதமுள்ள தொகையை 15 ஆண்டுகளில் செலுத்தும் வகையில் வீடுகளை வாங்கியுள்ளனர்.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் டி. பி. சரத்,

“இவை எங்களுக்கு தோன்றுவது, வீடுகளுக்கு தாங்களாகவே தீ வைத்து கொண்டார்களோ என்று தெரியவில்லை. அம்மாடி.. ஜன்னல்கள் எரிந்தவர்கள் கூட ஒரு வீட்டை வாங்கியுள்ளனர். 76 பேர் இருக்கிறார்கள். 26 பேரின் பட்டியல் இருக்கிறது.”

 

COMMENTS

Wordpress (0)