
கெஹல்பத்தர பத்மேவின் உதவியாளர் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகியோரின் நெருங்கிய உதவியாளரான யோஹான் அனுஷ்க ஜயசிங்க என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மடகந்த பகுதியைச் சேர்ந்த 24 வயதான யோஹான், கரந்தெனிய – மடககந்த இராணுவக் கமாண்டோ படையிலிருந்து தப்பியோடியவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 5 ஆம் திகதி கட்டுநாயக்க பகுதியில் மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைவாக சந்கேதநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, பன்னல – எலபலடகம பகுதியில் உள்ள ஒரு பாலம் ஒன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ வகை துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அத்தோடு, மெகசின் மற்றும் 6 ரவைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.