ரணிலுடன் முரண்டுபட்டு வெளியேறிய UNP பிரமுகர் லக்ஷ்மன் விஜேமான்ன இன்று சஜித்துடன்.

ரணிலுடன் முரண்டுபட்டு வெளியேறிய UNP பிரமுகர் லக்ஷ்மன் விஜேமான்ன இன்று சஜித்துடன்.

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.

எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு வந்த அவர் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

லக்ஷ்மன் விஜேமான்ன ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களுத்துறை மாவட்டத் தலைவராகவும் பணியாற்றினார்.

நேற்றைய தினம் சிறிகொத்தவில் இடம்பெற்ற கட்சிக்கூட்டத்தில் ஐ.தே.க தலைவர் ரணிலுடன் முரண்டு பட்டு கூட்டத்தை விட்டு வெளியேறிய நிலையில் இன்று சஜித் உடன் சேர்ந்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)