அரச மருத்துவ அதிகாரிகளின் போராட்டம் ஆரம்பம்

அரச மருத்துவ அதிகாரிகளின் போராட்டம் ஆரம்பம்

அரச மருத்துவ அதிகாரிகளின் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுகவீன விடுமுறை போராட்டம் என்ற அடிப்படையிலேயே இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்தக் குறித்த போராட்டத்தில் 18 தொழில்சார் சங்கங்கள் இணைந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடனான சந்திப்பின் போது தமது பிரச்சினைக்கு தீர்வுக்கிடைக்காமையே இந்தப் போராட்டத்திற்கான காரணம் என்று அரச மருத்துவர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் விபத்து மற்றும் அவசர சேவைகள் என்பன உரியமுறையில் முன்னெடுக்கப்படும். லேடி ரிஜ்வே,  கொழும்பு சிறுவர்களுக்காக பேராதெனிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வைத்தியசாலை, மஹகரகம புற்றுநோய் வைத்தியசாலை, தெல்லிப்பளை வைத்தியசாலை என்பவற்றின் பணிகள் இயல்பாக இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் தீர்வையற்ற வாகன அனுமதி ரத்து உட்பட்ட பல கோரிக்கைகள் வரவுசெலவுத்திட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை என்று கூறியே இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.