
முன்னாள் அமைச்சர் ரொஷான் சி.ஐ.டி சென்றமைக்கான காரணம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விளையாட்டு அமைச்சராக இருந்த காலத்தில் இடைக்கால கிரிக்கெட் நிர்வாகக் குழுவில் நியமிக்கப்பட்ட நிஜாம் ஜமால்தீனுக்குச் சொந்தமான மாத்தறை வெலிகமவில் உள்ள W-15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமையவே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் நிர்வாக சபை, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பணம் கொடுத்ததா? என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் அமைச்சரிடம் வினவியதாக தெரிவிக்கப்படுகிறது.