கண்டியில் 37 பாடசாலைகளுக்கு பூட்டு

கண்டியில் 37 பாடசாலைகளுக்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 37 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதற்கமைய, ஏப்ரல் 21 தொடக்கம் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட 37 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18 முதல் 27 வரையான காலப்பகுதியில் விசேட தலதா கண்காட்சி இடம்பெறவுள்ளதன் காரணமாகவே இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)