
6 கோடி ரூபா பொறுமதியான வீட்டை 1 கோடிக்கு உரிமை பத்திரம் பதிவு செய்த பிரபல அமைச்சர் !
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருட்டு, மோசடி, இலஞ்சம் என்பன கடந்த காலங்களை விட இன்று அதிகமாக இடம்பெறுவதாக சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். அநுராதபுர மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க அமைச்சர் ஒருவர் 600 இலட்சம் பெறுமதியான வீட்டை 100 இலட்சத்திற்கு எழுதியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
இதன்படி,சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தின் கீழ் முதல் முறைப்பாடு இந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சுக்கு தொடர்புடைய நிறுவனமொன்று இதற்கான பணத்தை செலுத்தியதாகவும்,அதற்கான பத்திரத்தில் கையொப்பமிட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சென்றுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.