
கல்கிசையில் துப்பாக்கி சூடு – 19 வயது இளைஞன் பலி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்கிசை கடற்கரை வீதியில் இன்று(05) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 09 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியில் இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டிருந்தனர்.
தெஹிவளையைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.