தேசபந்துவுக்கு விசாரணை குழுவால் அழைப்பு

தேசபந்துவுக்கு விசாரணை குழுவால் அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் மே 19 ஆம் திகதி விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தமது அதிகாரத்தை கடுமையாக துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட ‘விசாரணைக் குழு’ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அந்த குழு விடுத்துள்ள முதலாவது அழைப்பு இதுவாகும்.

இந்த விசாரணைகளுக்காக குறித்த குழு தற்போது சில நாட்களாக பாராளுமன்ற வளாகத்தில் கூடி வருகிறது.

COMMENTS

Wordpress (0)